kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

திங்கள், 14 பிப்ரவரி, 2011

உங்கள் கணணயின் திரையினை படமாக்க அரிய மென்பொருள்


நமக்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், இயற்க்கை காட்சிகள் மற்றும் பலவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்திருப்போம், அதுபோல கணினியில் உள்ள படக்காட்ச்சிகளை அல்லது சில முக்கியமாக கோப்புகளை படம் பிடிக்க வேண்டியிருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் நம்முடைய மானிட்டர் முழுவதையுமே அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ படம் பிடிக்க வேண்டியிருக்கும். இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத
இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம், அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும்.


நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும், இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டிஇந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும், நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், ஒரு விண்டோ ஒப்பன் ஆகும். உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்வு செய்து Capture பொத்தானை அழுத்தவும். உடனே இமேஜ் பைல் உருவாகிவிடும். இதில் சிறப்பம்சம் என்னவெனில் தேவையில்லாத Capture செய்துவிட்டோம் எனில் உடனே டெலிட்டும் செய்து கொள்ள முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக