kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
Photobucket Photobucket

சனி, 19 பிப்ரவரி, 2011

சூரியனில் இருந்து தீப்பிளம்புகள்

மில்லியன் கணக்கான மைல் தொலைவில் உள்ள சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. அங்கே நடப்பது ஹெட்ரஜன் ரி அக்ஷ்ன் ஆகும். சங்கிலித் தொடராக நடக்கும் இத் தாக்கத்தால் சூரியன் ஒரு தீப்பிழம்பாக வெப்பத்தை வெளியிட்டவண்ணம் உள்ளது. சூரியனுக்கு என்று ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதிலும் அது புவியீர்ப்பு சக்த்தியைவிட அதிகமானது. ஆனால் சிலவேளைகளில் சூரியனில் ஏற்படும் வெடிப்புகளால் சில தீப் பிழம்புகள் சூரியனை விட்டுவெளியே தூக்கி எறியப்படுகிறது. அவை சில நேரங்களில் பூமியை நோக்கியும் வருவது உண்டு. அவ்வாறு வரும் தீப் பிழப்புகளால் பூமிக்கு பேராபத்து எதுவும் இல்லை என்றாலும் கூட அப் பிழம்பிகள் பூமியின் காற்றுமண்டலத்தை அண்மிக்கும்போது காந்தப் புலன்களைப் பாதிக்கும். கடந்த 15ம் திகதி சுமார் 4 வருடங்களுக்குப் பின்னர் சூரியன் தீ பிழம்புகளைக் கக்கியுள்ளது. அவை பூமிநோக்கிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவை பூமியை அண்மிக்கும்போது, வடக்கு மற்றும் தென் துருவங்களில் உள்ளவர்கள் வாணில் சில அபூர்வமான நிறங்களைப் பார்க்ககூடியதாக இருக்கும். இந் நிகழ்வை அவ்ரோரா என அழைப்பார்கள். இத் தீ பிழம்புகள் பூமிக்கு மேலே உள்ள செய்மதிகளையும், மின் பிறப்பாக்கிகளையும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் தொலைத் தொடர்புகளில் பெரும் சிக்கல் ஏற்படக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இலங்கைத் தீவுக்கு மேலாக இத் தீ பிழம்புகள் வரமாட்டாது எனவும், ஆசியப் பகுதிகள் அவை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் செய்மதிகள் பாதிப்படைந்தால், இன்டர்நெட் முதல் பல தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படும் நிலை தோன்றலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கு முன்னர் 1972 ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் தொலைத்தொடர்பாடல் துறை செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது. சூரியனின் தீப்பிளம்புகள் 1989 ஆம் ஆண்டில் கனடாவின் கியூபெக் பிராந்தியத்தில் சுமார் 6 மில்லியன் பேரை இருளில் ஆழ்த்தியதுடன், அந்த நாட்டின் மின் விநியோகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக