kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

சனி, 12 மார்ச், 2011

பூமிக்கு அருகில் வருகிறது சந்திரன்: நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு

அடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப் போகிறது. 18 ஆண்டுகளுக்குப்
பிறகு சந்திரன் மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19 ம் திகதி சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது.
அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைலாக குறையும். கடந்த 1992 ம் ஆண்டுக்குப் பிறகு பூமியும், சந்திரனும் மிக அருகில் வரப் போகின்றன. வரும் பௌர்ணமி அன்று சந்திரன் வழக்கமான அளவை விட சுமார் 90 சதவீதம் பெரியதாக இருக்கும்.
அடுத்த மாத பௌர்ணமி வரை இதை பார்க்க முடிவதுடன் வெளிச்சமும் அதிகமாக இருக்கும். சூப்பர்மூன் என்ற இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. அதாவது 18 முதல் 19 ஆண்டு இடைவெளியில் நிகழ்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் இமெயில்கள் பரவி வருகின்றன.
வானில் அதிசயங்கள் நிகழும் போது நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனினும் பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது.
கடற்கரை நகரங்களில் மட்டும் வானிலையில் சிறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலில் அலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜான் கெட்லே தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ம் ஆண்டில் சூப்பர்மூன் ஏற்பட்ட போது அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை டிரேசி என்ற சூறாவளி புரட்டிப் போட்டதாகவும், 1974 ல் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சந்திரன் மிக அருகில் வருவதால் ஏற்படும் வானிலை மாற்றங்களால், பூமியில் வெப்பம் தணியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் கோடைகால வெப்பத்திலிருந்து இந்த ஆண்டு மட்டும் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

 குறிப்பு:-  இது ஒரு lankasri இன் உடைய உலகச்  செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக