kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

புதன், 27 ஏப்ரல், 2011

மக்கள் சேவையினால் கடவுளான சாய்பாபாஉலகம் பூராவும் மூன்று கோடிக்கு மேற்பட்ட மக்களால் ஜீவமந்திரமாக உச்சரிக்கப்பட்ட பெயர் சத்ய சாயி பாபா. ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த மக்கள்
சேவகராக உதவிகள் தேவைப்படுவோருக்கு அனைத்தையும் நிறைவேற்றித்தரும் ஒரு தனிமனித அரசாங்கமாக செயற்பட்டவர் பாபா. இன்று அவரின் உயிர் பிரிந்துள்ள நிலையில் இன, மத, ஜாதி பேதமின்றி கோடிக் கணக்கான மக்கள் கண்ணீர் வடித்து தம் ஆத்மாஞ்சலியை செலுத்துகின்றனர் என்றால் அதற்கு பாபாவின் மனுக்குலத்துக்கான தன்னலமற்ற சேவையைத்தவிர வேறெதுவும் காரணமாக இருக்க முடியாது. ஒரு ஆன்மீகவாதி என்பதற்கும் அப்பால் மக்கள் நலத்திட்டங்களே இந்த உலகின் உதாரண புருஷராக பாபாவை சகலரும் நேசிக்க, வழிபட வைத்தது.

பாபா வாயிலிருந்து லிங்கம் எடுத்துக்
கொடுத்தது, மாலைகள் வரவழைத்தது, தங்கநகைகளை எடுத்துக் கொடுத்தது,விபூதி, குங்குமம் வரவழைத்தது எல்லாம் மாய வித்தைகளா அல்லது அருள் சக்தியா என்பதைப் பற்றியெல்லாம் நாம் ஆராய முயன்றால் அது வீண் விவாதங்களிலும் சர்ச்சைகளிலுமே கொண்டு போய்விட்டு விடும். பாபாவின் ஆச்சிரமத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை வைத்துக் கொண்டு அவரைக் கடுமையாக விமர்சித்தவர்களும் இல்லாமல் இல்லை. பாபாவின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள், பழிகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவர் தன்னலம் கருதாது முன்னெடுத்த மக்கள் சேவைகளே அவர் மீதான இக்குற்றச்சாட்டுகளைப் பின்னுக்குத் தள்ள வைத்து அவரை இறுதிவரை ஒரு மக்கள் சேவகனாக, பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக பெயரோடும் புகழோடும் விளங்க வைத்தது.

பாபாவின் உயிர் பிரியவில்லை. அவர் எம்முடனேயே வாழ்கின்றார் என்று அவரின் பக்தர்கள் கண்ணீர் விட்டுக் கதறியழும் அளவுக்கு பாபாவின் சேவைகள் மக்களை சென்றடைந்துள்ளன என்பதே உண்மை. பாபாவின் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுபவை. ஆந்திராவின் சபிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது  அனந்தபூர். அந்தளவுக்கு வறண்ட பூமி. இந்த மாநிலத்தை உலகின் பிரசித்தி பெற்ற பகுதியாக மாற்றியவர் பாபா. இந்த மாநிலத்தில் நிலவிய கடுமையான குடிநீர்ப் பஞ்சம் பாபாவின் 200 கோடி ரூபா (இந்திய நாணயப் பெறுமதி) திட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தினால் அம்மாநிலத்திலுள்ள 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் பயனடைகின்றனர். 2500 கிலோ மீற்றர் தூர குழாய்கள், 268 தண்ணீர் தாங்கிகள், 124 நீர்த் தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள், ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. பாபாவின் இத்திட்டத்துக்கு மத்திய அரசு 30 கோடி ரூபா நிதியுதவி வழங்க முன்வந்த போதிலும் அவர் அதனை ஏற்கவில்லை.

இது மட்டுமன்றி தனது பக்தர்களுக்காக 137 நாடுகளில் நூற்றுக்கணக்கான சமூகசேவை நிறுவனங்களையும் இவர் நடத்தி வந்தார். உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, அறிவியல், கலை, ஆன்மீக துறைகளில் இவரது சேவைகள் சிறப்புற நடைபெற்றன. பாபாவின்"வைட் பீல்ட்'ஆசிரமத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் 60 படுக்கைகளுடன் அமைந்துள்ள சத்ய சாய் பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இருதய நோய் ,நரம்பியல் நோய்களால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெற வேண்டுமானால் அதற்கு இன்று இலட்சக்கணக்கான ரூபா பணத்தைச் செலவிட வேண்டும். இது சாதாரணமக்களால் முடியாத விடயம் என்பதனால் அவர்களின் நன்மைகருதி அவர்களின் உயிர் காக்க பாபாவின் சத்ய சாய் உயர் மருத்துவ விஞ்ஞான வைத்தியசாலையில்  இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறையில் மட்டுமன்றி கல்வித்துறையிலும் பாபாவின் சேவைகள் அளவிட முடியாதவையாகவே உள்ளன. சத்ய சாய் கல்வி நிறுவனங்கள் மூலம் ஏழைகளுக்குத் தரமான கல்வி வழங்கப்படுகின்றது. பாபா பெயரில் இயங்கும் பல கல்லூரிகளை பெங்களூரில் பார்க்க முடியும். இதுமட்டுமன்றி பெங்களூரில் உள்ள பாபாவின் ஆச்சிரமத்துக்கு அருகில் முதியோருக்காக
"விருத்தாஸ்ரமம்' என்ற விடுதியொன்றும் கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியோர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் உள்ள வடக்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து அத் திட்டத்தை ஒரே ஆண்டில் பூர்த்தி செய்து தண்ணீர் இன்றி அவதிப்பட்ட அம்மாவட்ட மக்களுக்கு தண்ணீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தமிழக குடிநீர் திட்டத்துக்காக 200 கோடிரூபாவையும் அவர் வழங்கியிருந்தார்.


உலக அமைதி, ஒற்றுமையை வலியுறுத்திய பாபா மதங்களுக்கு அப்பாற்பட்டவராகவே திகழ்ந்தார். 1990 களில் இராம ஜென்ம பூமி பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்திருந்த சூழ்நிலை. பாபா மசூதியில் இராமர் கோவிலை கட்டியே தீர வேண்டுமென்பதில் உறுதியாகவிருந்த விஷ்வ ஹிந்து பரிசத்தை சேர்ந்தவர்கள் பாபாவை அணுகி இராமர் கோயில் கட்டவேண்டுமென்ற கோரிக்கையை ஆதரித்து அறிக்கையொன்றை விடுமாறு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் அவர் அதற்கு இணங்க வில்லை. நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நடு நிலைமையாகவே செயற்படுவேன். அதனால் இது தொடர்பில் என்னால் எந்த விதமான அறிக்கைகளையும் விட முடியாது. யாருடைய மனதையும் நான் புண்படுத்த விரும்ப வில்லை. என்று கூறிவிட்டார். பாபாவின் பக்தர்களாக இன்று வேறுமதங்களை சேர்ந்தவர்களும் இருப்பதற்கு அவரின் இந்தக் கொள்கையே காரணமாக உள்ளது.

பாபாவை எள்ளி நகையாடியவர்கள் ஏராளம் பேர். சித்து விளையாட்டுக்களால் சிந்தை கவருபவர் என்று கூறியவர்கள் ஏராளம் பேர். ஆனால் இவர்கள் பாபாவின் மக்கள் சேவைக்கு முன்னால் காணாமல் போய்விட்டனர். பல ஜனாதிபதிகள், பிரதமர்கள்,முதலமைச்சர்கள், அமைச்சர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என சகல தரப்பினரும் பாபா மீது பற்றுக் கொள்ள ஆன்மீகம் மட்டுமன்றி அவரின் அளப்பரிய மக்கள் சேவைகளே
பிரதான காரணியாக இருந்தது. ஸ்ரீ சத்ய சாய் மத்திய நம்பிக்கையகத்தின் சொத்தாக ஒரு லட்சம் கோடி ரூபா வரை இருப்பதற்கு மக்களுக்கு அவர் செய்த சேவைகளும் மக்கள் அவர் மேல் வைத்த நம்பிக்கையுமே அடிப்படையாகவுள்ளது. தனிமனித அரசாங்கமாகத் திகழ்ந்த அவரின் இலக்கு மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்தது.

ஆன்மீகத்தில் நம்பிக்கையற்றவர்கள் கூட இன்று பாபாவுக்காக கண்ணீர் சிந்துவதற்கு, அஞ்சலி செலுத்துவதற்கு அவரின் மக்கள் நேயப் பணிகளே காரணம். அந்தப் பணிகளே பாபாவை இன்று மக்கள் மத்தியில் வாழும் தெய்வமாக உயர்த்தி விட்டுள்ளது. இதற்கு பாபாவின் ஆன்மீகத் அறிவுரையொன்றையே இங்கு உதாரணமாக கூறமுடியும். "கடவுள் ஒருவர்தான். அவர்தான் அனைத்து மதங்களின் காரண கர்த்தா. என்னிடம் வர மதம் தேவையில்லை. உங்கள் மதங்களில் இருந்தபடி என்னைப் பின்பற்றுங்கள். மக்களுக்குத் தொண்டு செய்யுங்கள். மரணத்துக்குப் பிறகும் உங்கள் சேவை உங்கள் பெயரை உலகுக்கு உரத்துச் சொல்லும் என்பதை நம்புங்கள்.'

குறிப்பு...இங்கே சாய்பாபா  பற்றிய செய்தியெல்லாம்  எதற்கு  எனும்                பொருள்பட யாராவது  கதைக்க கூடும். உண்மையிலே இச்செய்தி ஆனது சாய்பாபா வினை ஒரு ஆண்மீக வாதியாக நினைத்து  எழுதியதன்று. சமூக சேவகனாக நினைத்தே   எழுதியிருக்கின்றேன். இச்செய்தி அனைத்துமே ‌ வேறு இனையங்களிலே பெறப்பட்டது ‌ என்பதினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.http://www.youtube.com/watch?v=oc-dXm9q4eM&feature=player_embedded 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக