kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

சனி, 12 பிப்ரவரி, 2011

2012ஆம் ஆண்டு பற்றிய ஒரு பார்வை.

உலகம் 2012ல்  அழிந்து விடுவது சர்வ நிச்சயம் என்று பல மேற்கத்திய விஞ்ஞானிகளும்,  யோதிடர்களும் ‌அடித்து கூறி வருகின்றனர்.இந்நிலையில் இவை ‌அனைத்தும் பொய் ‌என்றும் இன்னம் 450 கோடி ஆண்டுகளிற்கு உலகம் அழியாது என்றும் விறு விறப்புடன் இந்திய விஞ்ஞானி கூறி வருகின்றார்.
உலகம் 2012இல் அழிந்து விடும் என்பதற்கு சில முக்கியமான சான்றுகள் உள்ளன.


இன்று நாம் பின்பற்றி வரும் திகதி முறைகளினை பல ‌ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பே துல்லியமாக கணித்தவர்கள் மாயன் நாகரியத்தினர்.  சூரியன்காலாவதியாகும் திகதியினையும், இவர்கள் கணித்துள்ளனர். இவர்கள் கூறும் ‌அந்த திகதி 2012 தான். எனேவேதான் 2012ல் உலகம் அழிந்து விடும் என்பது இவர்கள் கருத்து.
சூரியனுக்குள் ஏற்பட  இருக்கும் பனிப்புயல் காரணமாக ஏற்படும் கதிர் வீச்சு பூமியை  பொசுக்கி விடும் என்பது சூரிய ஆராச்சியாளர்களின் கருத்து.

உலகம் உருவான விதம், உலகை  இயக்கும்  அடிப்படை கட்டமைப்பை தெரிந்து கொள்ள விரும்பிய ‌ஐரோப்பிய விஞ்ஞானிகள் உலகின் பெரிய மூலக்கூறு இயந்திரத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27KM  ஆழத்தில் அணுக்களினை வைத்து அவற்றினை ஒன்றினைத்து மீண்டும் வெடிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை 2012ம் ஆண்டே செய்ய திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு நடந்தால் பூமியே நொருங்கிவிடும்.

திரு விவிலிய நூலில் உலகம் 2012ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.கடவுளிற்கும் சாத்தானிற்கும் கடைசி யுத்தம் நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்று பைபிள் கூறுகிறது. இதனையே சீனத்து நூல்களும், சில இந்து புராணங்களும் கூறுகின்றது.

இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதாகவும் அது வெடித்தால் இந்த உலகமே அழிந்துவிடும் என்று அமெரிக்க மண்ணியல் ‌ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 650000 ஆண்டுகளிற்கு ஒருமுறை நடக்குமாம். அந்த ஆண்டு2012 என்கிறார்கள் அவர்கள்.

இவை அனைத்தும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்பதற்கு சொல்லப்படும் காரணங்கள்.

மேற்கூறிய அனைத்தும் பொய் என்று இந்திய விஞ்ஞானி ஐயம்பெருமாள் அடித்துகூறுகின்றார்.

விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப ‌ஆராச்சியின் படி இன்னும் 450 ஆண்டுகளிற்கு உலகம் ‌அழிவதற்கான வாய்ப்பே இல்லை ‌என்கின்றார் ஐயம்பெருமாள்.


இன்னும் ஒரு சிலர் 2020ம் ஆண்டு பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் என்று கூறுகின்றனர்.அப்படி ஒருநிலை வந்தால் அக்னி ஏவுகனை மூலம் அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுகூடத்தில் உள்ளது. எனவே,எக்காரணத்தினைக்கொண்டும் பூமி அழியாது ‌என்கின்றார் இவர்.

சூரிய சக்திமூலம் மின்சாரம் பெறும் முயற்சி வெற்றி பெற்று விட்டது. அதே போல் கடல் நீரினை குடிநீர்‌ஆக்கும் முயற்சியும் வெற்றி பெற்று விட்டது. எனவே உலக மக்களின் தேவைக்கு மின்சாரமும் குடிநீரும் உள்ளது. எதிர் காலத்தில் நாம் அதற்கு பயப்பட தேவையில்லை என்கின்றார் அவர்.

பூமி‌ வெப்பமாதலினைத் தடுக்க  அனைவரும் மரக் கன்றுகளினை நட்டு வளர்த்து  மாசு கட்டுபாட்டினைச் சரிசெய்யலாம். அதன் மூலம் அனைவரும் ‌ ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றார் ஐயம்பெருமாள்.


இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க  தற்போது  நாசா விஞ்ஞானிகள்  எதிர் காலத்தில் வேற்றுகிரக வாசிகளுடன் போரிட தயாராக இருங்கள் எனும் கருத்துபட தகவல் ஒன்றினைக் கூறியுள்ளனர் .

 
                                                                 AJIKUMAR.Nகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக