kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai
உங்கள் வருகைக்கு நன்றி kodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulaikodukkulai

புதன், 16 பிப்ரவரி, 2011

நம்மவர் தேடும் வலம்புரி சங்கு. ஒரு பார்வை.


சங்குகளில் பல இனங்கள்  உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி
என்று அவற்றைக ்கூறுவார்கள்.
                        சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை  வலம்புரிச் சங்கு என்பார்கள்.
வலம்புரி

இடம்புரி
வலம்புரியா  என்று எப்படி நிர்ணயிப்பது?  

சங்கின் நுனி மேல்புறமாக நோக்கியிருக்குமாறு வைத்திருக்கவேண்டும். கைகளை முஷ்டி பிடிக்கவேண்டும்(வலக்கை). ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை உள்ளங்கைக்குள் அடங்கியிருக்குமாறு மடக்கிவைக்கப்பட்டிருக்கவேண்டும். பெருவிரல் மேல்நோக்கி நீட்டப்பட்டிருக்கவேண்டும். சங்கின் உட்புறச் சுழற்சி எந்தக் கையின் விரல்களின் உட்புறச்சுழற்சியோடு ஒத்து இருக்கிறதோ, அந்தக் கையை ஒத்த சங்கு அது. வலக்கையுடன் ஒத்திருந்தால் அது வலம்புரி.

வலம்புரிச் சுற்று

  இந்த இடத்தில் உயிரியல் நூலைக் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போமே? இயற்கையின் பல விதிகளில் Mutation என்பதும் ஒன்று. சாதாரணமாக எந்த உயிரினத்திலும் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் அவற்றின் பாரம்பரிய குணாதிசயங்களைப் பொறுத்தே அமையும்.ஆதியில் மூதாதையரிடமிருந்து வந்த ஜீன்களின்மூலம் கிடைக்கப் பெற்ற குணாதிசயங்கள்தாம் அந்த வம்சத்தில் வந்த வாரிசுகளிடையே தோன்றும்.இந்தப் பொது விதி பல சமயங்களில் பிறழ்ந்துவிடும். அதுவரைக்கும் அந்த குறிப்பிட்ட வம்சாவளியிடம் காணப்படாத முற்றிலும் புதிய குணாதிசயம் திடீரென்று தோன்றிவிடும். இத்தகைய மாறுதலைக் கொடுக்கும் புதிய ஜீன் தோன்றியதாலேயே இவ்வாறு ஏற்படும்.
                        இந்த மாதிரி பிறழ்ச்சியின் மூலம் ஏற்படும் குணாதிசயங்கள்கொண்ட ஜீவராசி தோன்றுவதை Mutation என்றும் அந்த ஜீவராசியை Mutant என்றும் குறிப்பிடுவார்கள்.
                        அணுசக்தியின் வெளிப்பாட்டின்போது ஏற்படும் கதிர்வீச்சால் மியூட்டேஷன் ஏற்படும். சூரியனின் கதிர்களிலும்கூட இந்த மாதிரியான ஆற்றல் உண்டு.
                        பல்லாயிரக்கணக்கான இடம்புரிச்சங்குகளில் ஒரே ஒரு வலம்புரிச்சங்கு தோன்றுவது மியூட்டேஷன ்மூலமாகத்தான்.
                        ஆகவே வலம்புரிச ்சங்கு எனப்படுவது ஒரு மியூட்டண்ட் ஸ்ட்ரேய்ன் எனப்படும் ஜீவராசி. அது தனிப்பட்ட இனமில்லை.
                        வலம்புரிச் சங்குகள் இயற்கையில் அதிகம் காணப்படமாட்டா. அதிலும் வெண்சங்கு எனப்படும் பால்சங்கில் வலம்புரி ஏற்படுவது மிக அபூர்வமானது. அதுவும் பெரியதாக இருப்பது இன்னும் அபூர்வம்.  ("ஆனாலும்கூட தற்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளிலும் கோயில்களிலும் வலம்புரிச சங்குகள் வாங்கி வைத்திருக்கிறார்களே. கலைப்பொருள்கள் விற்குமிடங்களிலும் பூசைக்குரிய சாமான்கள் விற்கும் ஒவ்வொரு கடையிலும்  நூற்றுக்கணக்கில் வலம்புரிச்சங்கு வைத்திருக்கிறார்களே?" என்ற கேள்வி எழலாம். அதெல்லாம் பிறந்த இடத்தின் மகிமையைப் பொறுத்தது. வலம்புரிச் சங்கின் பிறப்பிடம் கடல். ஏதோ ஒருவகை (இ)-மி(யூ)ட்டேஷனால் அது பிலாஸ்ட்டிக் தொழிற்சாலைகளிலும் தற்காலத்தில் பிறக்கிறது.)

திருச்செந்தூர் கோயிலில் மூலவர் பூஜைக்காக வெள்ளி பொருத்தப்பட்ட வலம்புரி சங்கு

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பகத்தின் கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் தெரிவித்தது..
கடலில் வாழும் உயிரினங்களில் மெல்லுடலிகள் இனங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவற்றில் ஒன்று ஒரு ஒட்டு உயிரி. மற்றொன்று இரு ஒட்டு உயிரி. ஒரு ஒட்டு உயிரிகளைச் சங்குகள் என்றும் இரு ஒட்டு உயிரிகளைச் சிப்பிகள் என்றும் சொல்கிறார்கள். சங்கு வகைகளில் டர்பினெல்லோ பைரம் என்ற சிற்றின வகையை சேர்ந்ததே வலம்புரிச் சங்கு. இடம்புரி, வலம்புரி என்பனவற்றில் இந்தியாவில் கிடைக்கும் எல்லா வகையுமே பெரும்பாலும் இடம்புரியாகத்தான் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் லட்சத்தில் ஒன்று பிறக்கும் போதே உறுப்பு மாறி (மியூட்டேஷன்) பிறந்து விடும். அதாவது கடிகார சுற்றுக்கு எதிர் திசையில் உடற்சுற்று அமைப்புடன் உருவாகும் டர்பினெல்லோ பைரம் சிற்றினத்தை சேர்ந்த சங்குகள் வலம்புரி சங்குகள் எனப்படுகின்றன.கடலின் ஆழத்தில் மணற்பாங்கான இடத்தில் வாழ்பவை. ஒரே சமயத்தில் லட்சம் முட்டைகள் இட்டாலும் அவற்றில் சில மட்டும் குஞ்சுகளாக பொரிந்து சங்குகளாக வளர்ச்சி அடைகின்றன. கடல்நீரில் உள்ள மனித கண்களுக்குக்கூட புலப்படாத நுண்ணிய தாவர மிதவைகள், விலங்கு மிதவை உயிரிகள்தான் இவற்றின் உணவு. கடலின் அடிப்பரப்பு மிகவும் பாதுகாப்பாக இருந்த காலத்தில் பல பேர் இதை நம்பி கடலுக்குள் மூழ்கி சங்கு குளித்து அதை நம்பியே வாழ்க்கையும் நடத்தி வந்திருக்கின்றனர். அவர்களை சங்கு குளிப்பவர்கள் என்றார்கள். கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தும்போது கடலின் அடிப்பரப்பில் உள்ள இதன் முட்டைகள், குஞ்சுகள் போன்றவை அழித்து விடுகின்றன. பெரும்பாலான மீன்களும் சங்குக்குஞ்சுகளின் இறைச்சி சுவையாக இருப்பதால் அவற்றைத் தின்று விடுகின்றன. இக்காரணங்களால் இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு இன்று இந்த இனமே முற்றிலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.வலம்புரிச் சங்குகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி இயற்கையிலேயே அனைத்துமே வலம்புரிகளாக பிறக்கும் மற்ற சிற்றினத்தை சேர்ந்த சாதாரண சங்கு வகைகளை (ஆப்ரிக்காவில் கிடைப்பவை) வலம்புரிச் சங்கு என்று விற்று விடுகின்றனர்.இவ்வகைச் சங்குகள் புனிதம் இல்லாதவை. உண்மையான வலம்புரிச் சங்குகளைக் காதில் வைத்துக் கேட்டால் கடலின் ஒலி போன்ற ஓசை வரும். மகாலெட்சுமியின் பேரருளைப் பெற்றிருப்பதாக நம்புவதால் இவற்றை பலரும் வீடுகளில் வாஸ்து பார்த்து வைக்கிறார்கள். ' என்கிறார்.
 
அன்மையில் ஒரு வலம்புரி 800 000ருபாவிற்கு விற்பனை செய்தவை நான் நேரிலே பார்வையிட்டேன்.
சாகா நிலையிலுள்ள வலம்புரி

AJIKUMAR.N

2 கருத்துகள்: